ஐந்தாம் வேதம் கதை
1972 ல் மதுரையில் உள்ள அரிந்தம்பட்டி என்கிற இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைக்கிறது, அதில் நான்கு வேதங்களை தாண்டி ஐந்தாவதாக ஒரு வேதம் இருப்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது. அந்த வேதம் கிடைக்க இன்னும் 50 வருடங்களுக்கு மேல் ஆகும் என்ற குறிப்பும் உள்ளது.
Read Also: Otrai Panai Maram Tamil Movie Review
60 வருடங்கள் கழித்து, கதையின் நாயகி அணு அவரின் அம்மாவின் அஸ்த்தியை கரைக்க காசிக்கு செல்கிறார். அஸ்த்தியை கரைத்துவிட்டு திரும்பும்போது அங்கு உள்ள சுவாமி ஒரு பெட்டியை கொடுத்து ஐங்கரபுரம் என்கிற கிராமத்தில் கொடுக்க சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். அணுவும் ஐங்கரபுரத்திற்கு செல்கிறார். ஆனால் இவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. பிறகு அங்கு பல அமானுஷிய விஷயங்கள் நடக்கிறது. கடைசியில் அணு அந்த கிராமத்தை விட்டு வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும் சுவாமி கொடுத்த பெட்டியை கொடுத்தாரா? இல்லையா? என்பதும் ஐந்தாம் வேதம் கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதி கதை…
இந்த கதையினை மர்மதேசம் தொலைக்காட்சி தொடரின் இயக்குனரான நாகா இயக்கியுள்ளார்.
8 எபிசோடுகளை கொண்ட இந்த ஐந்தாம் வேதம் ZEE 5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡சிறப்பான சில ட்விஸ்டுகள்
➡பரபரப்பான கடைசி 3 எபிசோடுகள்
படத்தில் கடுப்பானவை
➡சுவாரசியமற்ற ஒருசில எபிசோடுகள்
ரேட்டிங்: (3 / 5)