அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் – 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!

நடிகர் அஜ்மல் கோ, நெற்றிக் கண் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகிறது.

இதுகுறித்து அஜ்மல் கூறும் போது, முதலில் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு பல தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தது. ஆனாலும் அவரைப் பிடித்தவர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர். என்னால் முடிந்த வரை அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சிக்கிறேன். ராம் கோபால் வர்மாவும் எனக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருக்கிறார். இது எனது திரை வாழ்வில் மிகவும் முக்கியமான படம். மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படமாக 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது. நிச்சயம் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஇயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!
அடுத்த கட்டுரைஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்