அன்னபூரணி தமிழ் திரைப்பட விமர்சனம்

அன்னப்பூரணி கதை

பிராமின் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி அன்னப்பூரணிக்கு சிறுவயதிலிருந்தே, உணவுகளை முகர்ந்தே என்ன உணவு என்று கூறும் திறமை இருக்கிறது. மற்றும் நாக்கில் சுவை பார்க்கும் தன்மையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது, பள்ளியில் படிக்கும்போது தன் தோழிக்கு உணவு சமத்துவந்திருப்பார், அதனை தோழியின் அப்பா சாப்பிட்டுவிட்டு பாராட்டுகிறார். அந்த பாராட்டு அன்னபூரணியை மிக பெரிய சமையல்காரியாக ( chef ) மாற தூண்டுகிறது, பிறகு இதற்கென்று தனி படிப்பும் இருக்கிறதென்று தெரிந்துகொள்கிறார். பள்ளி படிப்பு முடிந்தவுடன், அன்னப்பூரணியின் பெற்றோர் அவரை MBA படிக்க சொல்கின்றனர். ஆனால் அன்னப்பூரணியின் நண்பன் ஃபர்ஹான் அன்னப்பூரணி கேட்டரிங் படிப்பதற்கு உதவி செய்கிறார், தானும் அவருடன் சேர்ந்து கேட்டரிங் படிக்கிறார்.

Read Also: Naadu Movie Review

கேட்டரிங் படிக்கும் போது அசைவ உணவுகளை சமைக்க அன்னப்பூரணியால் முடியவில்லை, அப்போது நண்பன் ஃபர்ஹான் அவருக்கு சில அறிவுரைகளை கூறி, நம்பிக்கை கொடுக்கிறார். பிறகு அன்னப்பூரணி அசைவ உணவுகளை சமைக்க ஆரம்பிக்கிறார். அன்னப்பூரணி கேட்டரிங் படிப்பதை தெரிந்துகொண்ட அவரின் பெற்றோர், அன்னப்பூரணி அசைவ உணவுகளை சமைப்பது தங்கள் பழக்கவழத்தில் இல்லாத ஒன்று என்பதால், படிப்பை பாதியில் நிறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர், அப்போது நண்பன் ஃபர்ஹான் உதவுடன் அங்கிருந்து கிளம்பி, தன் கனவை நோக்கி சென்னை செல்கிறார் அன்னபூரணி.

Read Also: Parking Movie Review

சென்னையில் பிரபல ஹோட்டலில் வேலை கேட்க போன இடத்தில் அன்னப்பூரணிக்கு வேலை கிடைக்காமல் போகிறது. அப்போது தனது ரோல் மாடலான Chef ஆனந்த் சுந்தரராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, அவர் முன் ஒரு சமையலை செய்துகாட்டி அசத்திவிடுகிறார், பிறகு அன்னப்பூரணிக்கு எந்த ஹோட்டலில் வேலை இல்லை என்றார்களோ, அந்த ஹோட்டலிலியேயே வேலை கிடைக்கிறது, அங்கு தனது திறமையால் தனக்கு வேலை இல்லை என்றவரின் பதவிக்கு, ஒருபடி மேல்பதவி வரை சென்றுவிடுகிறர், அன்னப்பூரணியை Chef ஆனந்த் சுந்தரராஜன் IBC நடத்தும் ஒரு பெரிய போட்டிக்கு பரிந்துரைக்கிறார். திடீரென்று ஒருநாள் அன்னப்பூரணிக்கு தீ விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தில் அன்னப்பூரணி தன் சுவை திறனை இழக்கிறார், இனிமேல் தன்னால் சரியாக சமைக்க முடியாது என மனமுடைந்து போய் விடுகிறார். இதற்கடுத்து அன்னப்பூரணி தன்னுடைய இந்த பிரச்னையை எதிர்கொண்டு IBC போட்டியில் கலந்துகொண்டு வென்றாரா? அல்லது பெற்றோரின் ஆசைப்படி திருமணம் செய்துகொண்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ அன்னப்பூரணியாக வாழ்ந்த நயன்தாரா
➡ கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ திரைக்கதை
➡ ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡ கணிக்கும்படியான அடுத்தடுத்த காட்சிகள்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *