ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்

7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை:

நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது… குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்… அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார்

அதே சமயம் கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது
வேறு வழியில்லாத நிலையில், நிவேதிதா அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்குகிறார். அவர் தனது குடியிருப்பில் சில அமானுசியமான விஷயங்கள் நடப்பது போலி பயமுறுத்தும் காட்சிகளை காட்டத் தொடங்குகிறார், இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

பிறகு நிவேதிதா உண்மையாகவே அமானுஷ்ய செயல்களை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது. மற்றும் நிவேதிதாவின் சிறுவயதில் அவர்கள் குடும்பம் அமானுஷியத்தால் அனுபவிக்கும் காட்சிகள் திருப்புமுனையாக அமைகிறது

நிவேதிதாவின் வாழ்க்கையில் நடக்கும் இந்த அமானுஷிய செயல்பாடுக்கு என்ன காரணம் என்பதும் அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியாக இருக்கிறது…

இந்த கதையில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வேடத்தில் வந்து அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்

மொத்தத்தில் ஆன்யாஸ் டுடோரியல் இன்றைய சூழலில் உள்ள இளைஞர்களுக்கு ஏற்ற பாடமாக இருக்கிறது

ஆன்யாஸ் டுடோரியல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இருக்கிறது

சிறப்பானவை
நிவேதிதாவின் நிதான நடிப்பு
ரெஜினாவின் ரசிக்கும் நடிப்பு
பின்னணி இசை
பல்லவி கங்கிரெட்டியின் இயக்கம்
ஒளிப்பதிவு

கடுப்பானவை
திரைக்கதை
அடிக்கடி வரும் FUCK என்ற வார்த்தை

Rating

{3/5}

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவெற்றி-ஷிவானி நடிப்பில் ‘பம்பர்’
அடுத்த கட்டுரைஉறியடி’ விஜய்குமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here