“தமிழ் ராக்கர்ஸ்” வெப் தொடரை ஆகஸ்ட் 19 முதல் கண்டுகளிக்கலாம் !

தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். பைரஸியுடனான திரைத்துறையின் போரை இந்த தொடர் காட்சிப்படுத்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார்.

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில்..,
“பைரஸி திருட்டானது பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. இந்த தொடர் இந்த போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது. ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது. இப்பாத்திரம் எனக்கு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரின் மையம் தனித்தன்மை வாய்ந்தது, தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவிஎம் புரடக்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பான்மையான மக்களிடம் இத்தொடரை கொண்டு செல்ல SonyLIV மிகப்பெரும் பாலமாக இருக்கும். ரசிகர்களின் கருத்துக்களை அறிய ஆவலோடு உள்ளேன் என்றார்.

SonyLIV தளத்தில் இத்தொடரை 2022, ஆகஸ்ட் 19 முதல் கண்டுகளிக்கலாம் !

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிரைவில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘வார்டு 126’
அடுத்த கட்டுரைஅமீர்கானின் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here