பாபா பிளாக் ஷீப் கதை
சேலத்தில் RR தனியார் பள்ளி ஒன்று உள்ளது , அந்த பள்ளியை இரண்டாக பிரித்து , ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி ஒன்றாகவும் , இருபாலரும் படிக்கும் பள்ளி ஒன்றாகவும் நடத்தி வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி , எதிர்பாராத விதமாக இவர் இறந்துபோக பண பிரச்சனை காரணமாக இரு பள்ளியையும் ஒன்றாக இணைகின்றனர் சுரேஷ் சக்ரவர்த்தியின் பிள்ளைகள்.
இரு பள்ளிகளை ஒன்றாக்கியபின் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குள் யார் அந்த கடைசி பெஞ்சில் உட்காருவது என இவர்களுக்குள் சண்டை நடக்கிறது , இதனை சமாளிக்க பள்ளி முதல்வர் மாணவர்களை Busy ஆக வைத்திருக்க, மாணவர்களுக்கு Election,Examination, Exhibition ஆகியவற்றை நடத்த முடிவு எடுக்கிறார் , அப்போது அயாஸ் டீமுக்கும் NP டீமுக்கும் போட்டி நடக்கிறது , இந்த போட்டியில் எந்த டீம் வென்று கடைசி பெஞ்சை பிடித்தார்கள் என்பதும் , போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் இவர்கள் கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜ்மோகன் ஆறுமுகம் சற்று கலகலப்பாகவும் , நல்ல கருத்துடனும் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்கரு
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பாடல்கள் & பின்னணி இசை
படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
Rating : ( 3.75/5 )