யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி.

யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக , வெகுஜன மக்களை கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடிந்து , இருதிக்கட்ட பணிகளில் இருக்கிறது பொம்மை நாயகி. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக யாழி பிலிம்ஸ் விக்னேஸ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.

கலை- ஜெயரகு,
எடிட்டிங் -செல்வாRK.
நடனம் – வினோத்குமார், சல்சாமணி.
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
பாடல்கள் -கபிலன், இளையகம்பன், அறிவு, சித்தன் ஜெயமூர்த்தி, லோகன்.
உடைகள் – ஏகாம்பரம்.
சவுண்ட் எபக்ட் – ஆண்டனி BJ ரூபன்.

இணை தயாரிப்பு-
விக்னேஷ் சுந்தரேசன்
வேலவன்
லெமுவேல்

PRO – குணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *