தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் நடிகர்

நடிகர் #சூர்யா அவர்களுக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான #தேசிய_விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் என். லிங்குசாமி இயக்கத்தில் ‘ அஞ்சான் ‘ திரைப்படத்தில் வசனகர்த்தாவாகப் சூர்யாவோடு பணியாற்றினேன். இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில்
‘வணங்கான்’ திரைப்படத்தில் ஒரு நடிகனாக அவருடன் பணியாற்றுகிறேன்.

அவரது பயணத்தில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பின் நுட்பங்களை மேலும் மேலும் உணர்ந்து வெளிப்படுத்துபவராக உயர்ந்துகொண்டே வருகிறார்.

ஆஸ்கர் பரிந்துரைக் குழுவில் இடம்பெற அழைப்பு வந்தது ஓர் உலகலாவிய அங்கீகாரம் எனில் இது அவருக்கு தேசிய அங்கீகாரம். ஏற்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் அழுத்தமானவை. வணிக சினிமாவிற்கான ‘ஸ்டைல்’ , கலைப்படத்திற்கான ‘உண்மையை அருகில் கொணர்தல்’ ஆகிய இரு பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் சூர்யா.

Read Also: Nadhi Tamil Movie Review

அது மட்டுமல்ல….
பண்பாளர். உதவும் மனப்பான்மை கொண்டவர். அன்பானவர். ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் ஏராளமான கல்வி உதவிகளைச் செய்து வருபவர்.

இதயம் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள் சூர்யா! உங்கள் உயரங்கள் இன்னும் வளரட்டும்.
‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
பிருந்தா சாரதி

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here