பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை கதை

மனநலம் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் ராஜு, துணிக்கடைக்கு வைக்கும் பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார் , அப்போது அங்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது போல் ஒரு பொம்மையை பார்க்கிறார். அந்த பொம்மையை பார்த்தவுடன் இவரின் சிறுவயது காதலியான நந்தினி நியாபகத்திற்கு வருகிறார்.

Read Also: Adipurush Movie Review

அந்த பொம்மையை நந்தினியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார் ராஜு. ஒருநாள் திடீரென்று அந்த பொம்மை காணாமல் போகிறது , ராஜு அந்த பொம்மையை தேடி அலைகிறார். கடைசியில் ராஜு அந்த பொம்மையை தேடி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இவருக்கும் இருக்கும் உடல்நல பிரச்சனை சரியானதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ராதாமோகன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

SJ. சூரியாவின் அரக்கத்தனமான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
யுவனின் பாடல்கள் & பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல்

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *