பூமிகா திரை விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டி வியில் டைரக்ட் ரிலீஸ் செய்த படம் பூமிகா. இந்த படத்தின் மைய கரு இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும் என்பதை திகில் கலந்த ஒரு ஹாரர் சப்ஜெக்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரதிந்திரன்.


பூமிகா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் மிக முக்கியமான தமிழ் திரைப்படமாகும், மணிரத்னத்தின் நவரசத்தில் ரதீந்திரன் இயக்கிய “இன்மை” என்ற படம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது மட்டும் அல்லாமல் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 
அறிமுக நடிகரான விது பேட்டை படத்தில் சிறு கதாபாத்திரம் செய்து இருந்தாலும் இந்த படத்தில் இவர் தான் கதாநாயகன் . சூர்யா மற்றும் மாதுரியின் நடிப்பு தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள், அவந்திகா மன இறுக்கம் கொண்ட குழந்தையாக நடிப்பது எளிதான காரியம் அல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டு அவந்திகா பூமிகாவாக மாறி திரையில் நம்மை மிரள வைக்கிறார். பாவல் நவகீதன் நிறைய காட்சிகளில் சஸ்பென்ஸ் சஸ்டையின் செய்ய மிகவும் அற்புதமாக தனது கதாபாத்திரத்தை பலப்படுத்தி கதாபாத்திரத்தின் பேச்சுவழக்கு, வட்டாரவழக்கு, உடல் மொழி கதையின் பின்னணி போன்ற அத்தனை விஷயங்களிலும் நம்பகத்தன்மையை சேர்த்து நிறையவே ஸ்கோர் செய்கிறார்
முதல் காட்சியில் இருந்தே, ரதீந்திரன் இயற்கையின் பல கூறுகளால் நிரப்பப்பட்ட ஒரு சவாரிக்கு நம்மை அழைத்து செல்கிறார். இயற்கை மற்றும் மனிதனின் பேராசை பற்றிய உரையாடல்கள் தனித்து நிற்கின்றன, திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக படத்தின் இன்டெர்வல் வரை நிரம்பியுள்ளது, அதன் பிறகு வேகம் கொஞ்சமாக குறைகிறது, காரணம் படத்தின் ஆழமான கருத்தை நிறுத்தி நிதானமாக புரியும்படி சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம். முதல் பாதியில் பதற்றத்திற்கு வழிவகுக்கும் காட்சிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பீ ஜி எம் மிகவும் மிரட்டல். ஒரு மனித உடலை பூமியின் உடலுடன் தொடர்புபடுத்துவது, பூமி பற்றிய கோட்பாடுகளை தெளிவு படுத்துவது தலைப்பை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வைக்கிறது. இருட்டு, காடு, ஒரு செல் போன் டெக்ஸ்ட் மெசேஜ் என்று மிக எழுமையான விஷங்களை கொண்டு பதட்டத்தையும் பயத்தையும் வரவைக்க கூடுமானவரை முயற்சி செய்து வெற்றியும் பெற்று உள்ளனர் இயக்குனர்.

பூமிகா தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான ஒரு டீம் என்று தான் நிச்சியம் சொல்ல வேண்டும். ராபர்டோ காட்சிகள் அற்புதமானவை, கதாபாத்திரங்களின் சரியான மனநிலையை கேமரா கோணங்கள் அட்டகாசமாக அமைக்கிறது. மலைகளின் அழகிய அழகைப் படம்பிடித்த விதம், அமானுஷ்ய காட்சிகளுக்கு அற்புதமான பிம்பத்தை உருவாக்கிய விதம், ஒரு அழகான இயற்கை சார்ந்த பகுதியில் சிங்கல் சோலோவாக நிற்கும் ஒரு மரம் ,அந்த மரத்தை காட்டிய விதம் என்று ராபர்டோ ஒரு சிறந்த கேமரா மேன் என்று நிரூபித்து உள்ளார். பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளின் தீவிரத்தை நன்றாக உயர்த்துகிறது. சவுண்ட் மிக்ஸிங் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் கடுமையாக உழைத்து உள்ளார்கள். காட்டில் வந்த நரி மற்றும் பூமிகாவுடன் விளையாடும் அணில் போன்ற சீ ஜீ காட்சிகள் சுமார் ரகம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here