பம்பர் கதை
எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இருக்கிறார் கதையின் வெற்றி, இதனால் யாரும் அவரை மதிப்பதில்லை அப்போது இவருக்கு உதவிசெய்யக்கூடியவரான ஏட்டு ஒருவர் அவரின் ஊரில் ஒரு பெரிய பணக்காரரை கொலை செய்தல், அவருக்கு எதிரானவரிடமிருந்து பணம் கிடைக்கும் என்கிறார். பிறகு வெற்றி கொலை செய்ய திட்டமிடுகிறார், ஆனால் இவர்கள் யாருக்காக கொலை செய்ய வந்தார்களோ, அவரே இறந்து கிடப்பதால் வெற்றி தன் நண்பர்களை கூட்டிக்கொண்டு கேரளா சென்றுவிடுகிறார்.
அப்படி இவர்கள் கேரளா சென்ற பிறகு, ஹரிஷ் பேரடி- இடம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வெற்றி வாங்குகிறார் , ஆனால் எதார்த்தமாக அந்த டிக்கெட்டை அங்கேயே மறந்து வைத்துவிட்டு சென்றுவிடுகிறார் , பிறகு அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி பணம் விழுகிறது , ஹரிஷ் பேரடி அந்த டிக்கெட்டை வெற்றியிடம் கொடுக்க முயல்கிறார், கடைசியில் ஹரிஷ் பேரடி அந்த டிக்கெட்டை வெற்றியிடம் கொடுத்தாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
Read Also: Infinity Movie Review
இந்த கதையினை இயக்குனர் M. செல்வகுமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
ஹரிஷ் பேரடி & வெற்றியின் நடிப்பு
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை
ஒளிப்பதிவு
மனிதநேயம் பேசும் ஒருசில வசங்கள்
இரண்டாம்பாதி திரைக்கதை
தரமான கிளைமேக்ஸ்
படத்தில் கடுப்பானவை
படத்துடன் ஒட்டாத முதல் 30 நிமிட திரைப்படம்
Rating : ( 3.25/5 )