ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!

ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் மைதானங்களைப் போல் மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆக்சன் என்டர்டெய்னருக்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்து, புதிய சாதனையை…

Read More

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக #சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த…

Read More

ஜவான் – செப்டம்பர் 7- 7 கேள்வி-பதில்கள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. அதிலும் ஆக்ஷன் கலந்த டிரைலரைக் கண்டு ரசித்த பிறகு படத்தின் வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இதற்கு இப்படத்தின் முன்பதிவுகளே சாட்சியாக இருக்கிறது. பார்வையாளர்களின் அதிகரித்து வரும் உற்சாகத்தை மேலும் உயர்த்துவதற்கு தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்கள் வழியாக ‘ஜவான் -செப்டம்பர் 7- 7 கேள்வி பதில்கள்’ என்ற தலைப்பில் ஒரு காணொளியை…

Read More

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. இதில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல்,…

Read More

யோகிபாபு படத்தில் கர்நாடக இசை மேதை.. சுதா ரகுநாதன் பாடிய கானா பாடல் !

இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் ‘போட்- நெய்தல் கதை’என அறிமுகப்படுத்தப்பட்டது. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகி நாயகனை நோக்கி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல். அதற்கு ஜிப்ரான் டியூன் போட.. இப்பாடலை கர்நாடக இசையரசி பத்மபூஷன் – சுதா ரகுநாதன்…

Read More

சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!

BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது…

Read More

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான். விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். அந்த தனியார் பள்ளிக்கு…

Read More

ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட் ராமையா வஸ்தாவையா ‘ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘நாட் ராமையா வஸ்தாவையா பாடல், பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது. SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம்…

Read More

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ‘தனி ஒருவன் 2

வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன்…

Read More

சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’. இதில் பான்…

Read More