#BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் போயபதி ஸ்ரீனு...
ஏப்ரல் மாதம் வெளியாகும் “விஜய் பட இயக்குனரின் ரஜினி திரைப்படம்
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் " ரஜினி "
சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை...
‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (21.03.2023) நடந்தது.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது, "இன்று தம்பி கண்ணன் நல்ல தயாரிப்பாளர்,...
வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ டீசர் வெளியாகியுள்ளது
தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார்....
‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய...
ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023...
அனிமேட்டட் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷனான டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரங்களான ஹாலே பெய்லி மற்றும் மெலிசா மெக்கார்த்தி இருவரும் 95வது ஆண்டு அகாடமி விருதுகளின், ஏபிசியின் நேரடி ஒளிபரப்பில் இன்று...
பொம்மை நாயகி’ திரைப்படம் ZEE5 OTT தளத்தில் வெளியாகியுள்ளது
ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
நாடு முழுமைக்கும், மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக...
*’விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா*
எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் 'விடுதலை'. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது.
விழா நாயகன் இளையராஜா பேசியதாவது, " இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்" என்றார்.
இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, "'விடுதலை' படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்" என்றார்.
மேலும் அவர் பேசியதாவது,...
“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மார்ச்...
சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும்...