சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக்ல் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான ,நையாண்டி தனமாகவும்,அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
அடுத்தாக வெளியான ஸ்னீக்பீக்ல் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு sneak பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
அதை தொடந்து வெளியான Sneak peak 3 வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி. இன்றைய அரசியல் நிலையை காட்டுவது போல் அமைந்து இருந்தது. பெரும் வரவேற்பை பெற்றது

வித்தியாசமான போஸ்டர்கள்,sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான “உருட்டு”,”உருட்டு” பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுகபாரதி எழுதயுள்ள “உருட்டு”,”உருட்டு” பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்து உள்ளது. இதில் உள்ள வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கருத்துகளுடன்,தைரியமாக வெளிப்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியில் “உருட்டு”, “உருட்டு” பாடலுக்கு வரவேற்பை பெற்றுதந்துள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here