காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர் அறிமுகம்

மாயாண்டி கருணாநிதி

பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.
அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, ‘தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்’ என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055-ஆம் ஆண்டு இதை பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சி மூலம் மக்களை சிரிக்க வைப்பதுதான்.

யோகேஷ் ஜகன்னாதன்

தன் நண்பர்கள் மத்தியில் யோகி என்று அறியப்படும் யோகேஷ் ஜகன்னாதன், கடினமான உழைப்பாளி. ஒவ்வொரு நாளும் 70 கிலோமீட்டர், 4 மணி நேர பயணம் மேற்கொண்டு ஸ்டான்ட் அப் காமெடிக்கான ஓப்பன் மைக் வாய்ப்புக்குச் செல்கிறார். நகைச்சுவைக்கான இவரது வாழ்க்கை கடினம் தான். அங்கு ஓப்பன் மைக்கில் 4 நிமிடங்கள் இவர் பேசுகிறார். அதுவும் நான்குக்கும் குறைவான ரசிகர்களுக்கு. அதில் ஒன்றுக்கும் குறைவான சிரிப்பே கிடைக்கும்.


ஆம், அதுதான் இவரது தினசரி வாழ்க்கை. ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து, பின் அதி வேகமான மாஸ் ஹீரோ பாடல்களைக் கேட்டபடியே நடப்பார். அப்படி நடக்கும் போது தான் எவ்வளவு சிறப்பாக நகைச்சுவை செய்வோம் என்று நினைத்துப் பார்ப்பார். ஆனால் நிகழ்ச்சி மோசமாக நடந்து முடிந்த பின், சோகமான பாடல்களை கேட்டு நடந்தபடியே வீட்டுக்குச் செல்வார்.
அவர் புகழ், அவரை எவ்வளவு பேருக்குத் தெரியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும் போது, அவரைப் பற்றி அவர் மட்டுமே எழுதித் தர முடியுமே தவிர வேறு வழியில்லை. காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் நடுவர்களையும், ரசிகர்களையும் இவரால் சிரிக்க வைக்க முடியுமா? வரும் செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் பாருங்கள்.

ஸ்யாமா ஹரிணி

கார்த்திக் குமார், எஸ் ஏ அரவிந்த் மற்றும் பார்க்கவ் ராமகிருஷ்ணன் ரசிகையான ஸ்யாமா ஹரிணி, இவர்களின் சில நிகழ்ச்சிகளை சென்னையில் நேரடியாக பார்த்த பின் ஸ்டான்ட் அப் காமெடியில் களமிறங்க முடிவு செய்தவர்.
இவர் மைக்கைக் கையில் பிடிக்கக் காரணம், இவரது புலம்பல்களை வேறெப்படியும் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால் தான். பல கஃபேக்களில், பப்களில், தற்போது சென்னையின் காமெடி க்ளப்களில் ஸ்யாமா நிகழ்ச்சிகள் செய்துள்ளார். நகைச்சுவையாலர் சாய் கிரணுக்காக, அவரது நிகழ்ச்சியை சிறிய நகைச்சுவை பேச்சுடன் துவக்கி வைத்துள்ளார்.
தனது தாய் மொழியான தெலுங்கில் தன்னால் சரளமாகப் பேச முடிகிறது என்பதால், தெலுங்கில் ஸ்டான்ட் அப் காமெடி செய்ய வேண்டும் என்று ஸ்யாமா ஆசைப்படுகிறார். மேடை நாடகங்களிலும் ஸ்யாமா நடித்து வருகிறார். அதை முழு ரசனையோடு செய்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில், ரசிகர்களை தரையில் புரண்டு சிரிக்க வைக்கும் ஸ்யாமாவின் நகைச்சுவையைப் பார்த்து ரசியுங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here