தெய்வ மச்சான் தமிழ் திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் கதை

கதையின் நாயகன் தபால் கார்த்தி ( விமல் ) அவரின் தங்கையான குங்கும தேனுக்கு மாப்பிளை பார்த்துவருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அப்படி மாப்பிளை பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்துகொண்டே இருக்கிறது.

ஆடுகளம் நரேன் அவர்கள், அவரின் குடும்பத்தை அழைத்துவந்து குங்குமத்தேனை பெண் பார்க்க வருகின்றனர், நரேன் அவரின் வயதான தம்பிக்கு குங்குமத்தேனை பெண் கேட்கிறார், விமல் அதனை மறுக்கிறார் , நரேன் அதனை மனதில் வைத்துக்கொண்டு குங்குமத்தேனுக்கு மாப்பிளை கிடைக்காதவாறு செய்கிறார்.

Read Also: Yaathisai Movie Review

இதுஒருபுரம் இருக்க மறுபுறம் தபால் கார்த்திக்கு அடிக்கடி கனவு வரும் அதில் வரும் ஒரு நபர் சொல்லும் அனைத்தும் நிஜத்தில் நடந்துவிடும், அப்போது எதிர்பாராதவிதமாக குங்குமதேனுக்கு மாப்பிளை கிடைத்துவிடுகிறார், தபால் கார்த்தி மாப்பிளையை பற்றி நன்கு விசாரித்துவிட்டு திருமணமும் நடக்க ஏற்பாடு நடக்கிறது, திருமணத்திற்கு முந்தையை நாள் தபால் கார்த்தியின் கனவில் குங்குமதேனுக்கு பார்த்த மாப்பிளை இறந்துவிடுவார் என சொல்கிறார், கடைசியில் அந்த கனவில் சொன்னபடி மாப்பிளை இறந்தாரா? அல்லது குங்குமதேனோடு வாழ்ந்தாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையை இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் அவரின் குறும்படத்தையே பெரிய படமாக, சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
சிரிக்கவைக்கும் சில காமெடிகள்

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *