காமி தமிழ் திரைப்பட விமர்சனம்

காமி கதை

கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு தேவதாசியும் அவரது மகளும் கஷ்டப்படுவது போல் கனவு வருகிறது.

இந்த பிரச்சனை சரியாக வேண்டுமென்றால், இமாலயாவில் உள்ள துரோணகிரி மலையில், மாலிபத்ரா என்ற காளான் உள்ளது. இந்த காளம் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கக்கூடியதாகும் அதனை தொட்டால் உனது வியாதிக்கு தீர்வு கிடைக்கும், மற்றும் இந்த கெட்ட கனவுகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார் ஒரு அகோரி. துரோணகிரி மலைக்கு செல்ல டாக்டர் ஜானவி உதவுகிறார். கடைசியில் பல தடைகளை தாண்டி துரோணகிரி மலைக்கு சென்று பிரச்சனைகளை தீர்த்தாரா? இல்லையா? என்பதும் ஜானவி இவருக்கு உதவுவதற்காக காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் வித்யாதர் காகிடா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡வித்யாசமான கதைக்களம்
➡விஷ்வக் சென் நடிப்பு
➡கதாபாத்திரங்கள் தேர்வு
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெருகேற்றப்படாத தேவதாசி & ஜானவி காட்சிகள்
➡குழப்பமான முதல்பாதி திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது
அடுத்த கட்டுரைபிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்