Game Over Review

நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்கள் நடித்த பின்பு பாலிவுட் பக்கம் போனவர் தற்போது கேம் ஓவர் படம் மூலம் கோலிவுட் சினிமாவிற்கு வந்துள்ளார்.

கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்கின்றது, அதை தொடர்ந்து டாப்ஸி நியூ இயர் கொண்டாட்டத்தில் நடந்த சில கசப்பான சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கின்றார்.

இதன் பிறகு அவருக்கு இருட்டை கண்டாலே பயபடும் ஒரு பெண்ணாக இருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் குத்தியிருக்கும் டாட்டூ அடிக்கடி வலிக்க கொடுக்க ஆரம்பிக்கின்றது.

ஏன் அந்த டாட்டூ இவருக்கு வலியை கொடுக்க ஆரம்பிக்கின்றது, இதற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்னென்ன என்று டாப்ஸி தேட ஆரம்பிக்கிறார்,அதற்கு பிறகு நிகழம் திகில் சம்பவங்களே இந்த கேம் ஓவர்.

படத்தை பற்றிய அலசல்
சிங்கிள் சிங்கமாக களமிறங்கி படங்களை டாப்ஸி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்திற்கு பிறகு டாப்ஸி நடித்தாலே அது தரமான படமாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை நமக்குள் வந்துவிட்டது. அதே போல் ஒரு நல்ல கதையுள்ள படத்தில் நடித்துள்ளார். முக்கியமாக காட்சிக்கு காட்சி அவர் பயப்படுகிறாரோ, இல்லையோ, அவர் வழியாக நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறார் என்பதே உண்மை.

மாயா போன்ற திகில் படத்தை கொடுத்த இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்துள்ள கேம் ஓவர் படத்திலும் திகில் படத்தை எடுப்பதில் வல்லவர் என்று நிரூபித்துவிட்டார். குறிப்பாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிலும், டாப்ஸி உதவியாளராக வருகின்ற வினோதினி எப்போதும் போல் யதார்த்த நடிப்பில் அசத்துகிறார். படம் முழுவதும் ஒரு வீடியோ கேம் பின்னணியில் ஆரம்பித்து, அதன் வழியாக கதை சொன்ன விதம் சூப்பர்.

நிச்சயமாக ஒரு மிகப்பெரிய இடத்தை அஸ்வின் அடைவார் என்று சந்தேகமே இல்லாமல் சொல்லாம், அந்தளவிற்கு படத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார். படத்தின் மிகப்பெரும் பலம் மற்றும் பங்காக பார்க்கப்படுவது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். ரான் ஈதன் இசை கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு.

படத்தின் பலம் :
டாப்ஸி மற்ற நடிகர், நடிகைகள் நடிப்பு.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் தரம்.

படத்தின் திரைக்கதை.

மொத்தத்தில் ஒரு திகில் கலந்த வீடியோ கேமிற்குள் சென்று அதை வெற்றிக்கரமாக முடித்து வந்த அனுபவம் இந்த கேம் ஓவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *