கட்டா குஸ்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டா குஸ்தி கதை

கேரளாவில் சிறுவயதிலிருந்தே தனது மாமன் விளையாடும் குஸ்தி விளையாட்டை பார்த்து வளர்ந்தவர் தான் கீர்த்தி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி ) , கீர்த்திக்கு குஸ்தி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் எந்த பிரச்சனை என்றாலும் இவர் சண்டை போடுவார் , இதனாலேயே இவருக்கு சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் அப்பா அம்மா இல்லாமல் மாமனின் கண்காணிப்பில் வளர்ந்தவர் தான் கதையின் நாயகன் வீரா, (விஷ்ணு விஷால்) இவருக்கு தன் எதிர்கால மனைவியை பற்றி, ஒருசில கனவுகள் இருக்கிறது. அது என்னவென்றால் இவர் கட்டிக்க போகும் பெண் இவரை விட கம்மியாக படித்தவராக இருக்கவேண்டும் என்பதும், அவருக்கு கூந்தல் முடி மிக நீளமாக இருக்க வேண்டும் என்பதுதான். நாயகனின் மாமாவான கருணாசும் , நாயகியின் மாமாவான முனீஷ்காந்த்தும் சிறு வயது நண்பர்கள். இவர்கள் எதார்த்தமாக சந்திக்க அப்போது வீராவுக்கும் , கீர்த்திக்கும் ஒரு சில பொய்களை சொல்லி திருமணம் செய்து வைக்கின்றார்கள். பிறகு இவர்களின் திருமண வாழ்க்கைக்குள் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்பதும், வீரா எந்த காரணத்திற்காக குஸ்தி கற்று கொள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் செல்லா அய்யாவு அவருக்கே உண்டான பாணியில் சற்று கலகலப்பாக இயக்கியுள்ளார்.

Read Also: Vadhandhi Web Series Review

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
வழக்கமான கதையில் வித்யாசமான திரைக்கதை
பாடல்கள் மற்றும் பின்னணி இசை
ஒளிப்பதிவு
ரெடின் கிங்ஸ்லி-யின் காமெடி

கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *