மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி இணையும் புதிய திரைப்படம் #RT4GM !!

தெலுங்கு திரையுலகில்  மாஸ் மஹாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி தொடர்ச்சியாக  ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது.  திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும். இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.  டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி  மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் #RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக் மற்றும்…

Read More

“டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து வெளியிட உள்ளனர் !!!

மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் நடிப்பில் பெருமை மிகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது “டைகர் நாகேஸ்வர ராவ்”. இயக்குநர் வம்சி இயக்கத்தில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 என இரண்டு அடுத்தடுத்த பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால்- இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் அதிரடியான பர்ஸ்ட் லுக் மே 24ல் வெளியாகவுள்ளது. இந்திய திரையுலகின் ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்…

Read More

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை…

Read More

கட்டா குஸ்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டா குஸ்தி கதை கேரளாவில் சிறுவயதிலிருந்தே தனது மாமன் விளையாடும் குஸ்தி விளையாட்டை பார்த்து வளர்ந்தவர் தான் கீர்த்தி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி ) , கீர்த்திக்கு குஸ்தி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் எந்த பிரச்சனை என்றாலும் இவர் சண்டை போடுவார் , இதனாலேயே இவருக்கு சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் அப்பா அம்மா இல்லாமல் மாமனின் கண்காணிப்பில் வளர்ந்தவர் தான் கதையின் நாயகன் வீரா, (விஷ்ணு விஷால்) இவருக்கு…

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில்…

Read More

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, ‘வால்டேர் வீரய்யா’ என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர்…

Read More

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியினையடுத்து, தற்போது கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆர்.டி.66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பலுபு’ என்ற படத்திற்கு பிறகு…

Read More