வதந்தி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வதந்தி கதை

கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது அங்கு ஒரு பெண் இறந்து பிணமாக இருப்பதை பார்க்கிறார்கள், அப்போது இவர்களுடன் வந்த நாயகி காணாமல் போய் இருப்பார் அதனால் , நாயகிதான் இறந்திருப்பார் என நினைத்து , படக்குழு சமூக வலைத்தளங்களில் , இவர் இறந்துவிட்டார் என பதிவிடுகினறனர் , அப்போது நாயகி படக்குழுவிற்கு போன் செய்து , எனது வீட்டில் பிரச்னை என்பதால் நான் எனது காதலனுடன் பெங்களூருக்கு வந்திருக்கிறேன் என்னை பற்றி தவறான வதந்தியை வெளியிடாதீர்கள் என்கிறார். அப்போது இந்த கேஸை விசாரிக்க, கதையின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா வருகிறார் , உடல் கூறு பரிசோதனையில் இவர் லைலாவின் மகள் வெலோனி என்பது தெரிய வருகிறது , அதை பற்றி விசாரிக்க எஸ் ஜே . சூர்யா வெலோனியின் வீட்டருகில் செல்கிறார் , அங்கு அவருக்கு பல தகவல்கள் கிடைக்கின்றன . வெலோனியின் அம்மா ஒரு லாட்ஜ் நடத்துகிறார் அங்கு தான் அவரின் குடும்பமும் தங்குகிறது மற்றும் வெலோனி ஆண்களிடம் அதிகமாக வழிந்து பேசுவார் என்பதும் தெரியவருகிறது அதுமட்டுமல்லாமல், வெலோனியை பற்றி நல்லவிதமாகவும் தகவல்கள் கிடைக்கின்றன , அப்போது மேல் அதிகாரிகள் இந்த கேஸை மூடி வைக்கின்றனர் . ஆனால் எஸ்.ஜே.சூர்யாவால் சாதாரணமாக இருக்க முடியவில்லை, இந்த கேஸ் இவரின் மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது , பிறகு இவர் தனியாக சென்று விசாரிக்க தொடங்குகிறார் , எஸ்.ஜே. சூர்யா வெலோனி எப்படி பட்டவர் என்பதையும் , அவரை யார் கொன்றார் என்பதையும் தனி ஆளாக கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் மிகவும் தனித்துவமாகவும் , விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்.

8 எபிசோடுகளை கொண்ட இந்த வதந்தி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னனி இசை
ஒளிப்பதிவு ( குறிப்பாக காடு , மலை காட்சிகள் )
தரமான 2,3,7, மற்றும் 8 வது எபிசோடுகள்
சிறப்பான சில வசனங்கள்

கடுப்பானவை
சுற்றி வளைக்கும் கதைக்களம்

Rating:( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here