ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாக்ஷி பணியாற்றியிருக்கும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நரேன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் பல சுவாரஸ்யங்களூட்டும் காட்சிகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பைப் பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிரூபாக்ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஇசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!