விரூபாக்ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா கதை

1979: ருத்ர வனம் என்கிற கிராமத்தில் வெங்கடாஜலபதி என்பவர் பில்லி சூனியம் வைப்பவராக இருக்கிறார் , அந்த சமயத்தில் ஊரில் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றனர், அதற்கு வெங்கடாஜலபதி தான் காரணமாக இருக்க முடியும் என்று நினைத்த மக்கள் அவரையும் , அவரின் மனைவியையும் மரத்தில் கட்டி உயிரோடு கொளுத்திவிடுகின்றனர், அப்போது அவரின் மனைவி இந்த ஊரில் உள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள் என சாபம் கொடுக்கிறார்.

12 வருடத்திற்கு பிறகு கதையின் நாயகன் சூர்யா தனது சொந்த ஊரில் உள்ள நிலங்களை அரசுக்கு பள்ளி, மருத்துவமனை கட்ட கொடுப்பதற்க்காக தனது அம்மாவுடன் வருகிறார், அப்போது அந்த ஊரில் சிலர் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர் , அதே சமயம் கதையின் நாயகி நந்தினிக்கும் அந்த மர்மமான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார் , இதனை கண்ட கதையின் நாயகன் சூர்யா இவை அனைத்திற்கும் என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார், கடைசியில் சூர்யா இந்த மர்மத்திற்கெல்லாம் என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து நந்தினி மற்றும் ஊர் மக்கள் அனைவரையும் காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் கார்த்திக் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

ஒலிக்கலவை ( Sound Effects )
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சம்யுக்தா வின் மிரட்டலான நடிப்பு
சுகுமாரின் எழுத்து
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு
தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு எதுவுமே இல்லை

Raitng ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *