வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ் !!

வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்

G.V.Prakash Kumar | Facebook

மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்

GV Prakash plays a doctor in Hollywood debut | The News Minute

முதன்முறையாக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்

I would not be acting, if financiers are reluctant to fund my films: GV  Prakash | Tamil Movie News - Times of India

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

GV Prakash Kumar calls 'Cold Nights', his first international album, a  dream come true | Tamil Movie News - Times of India

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

“’ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே!
ஹே நண்பா… கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” – என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ். இவர்கள் இருவருமே விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.

‘இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட்டே..

இந்த ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here