இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இடி மின்னல் காதல் கதை

கதையின் நாயகன் ஹரன் மற்றும் கதையின் நாயகி ஜனனி இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் வெளியில் சென்று வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் ஒருவர் இறந்துபோகிறார். பிறகு தாங்கள் செய்த இந்த விபத்தை மறைக்க ஜனனி சில விஷயங்கள் செய்கிறார். ஹரன் இன்னும் 4 நாட்களில் வேலையின் காரணமாக வெளிநாடு செல்கிறார், இந்த சமயத்தில் இப்படி நடந்துவிட்டதால் இருவரும் சற்று பயத்தில் இருக்கிறார்கள்.

Read Also: Hot Spot Tamil Movie Review

வெளியில் சென்ற தந்தை இன்னும் வராத காரணத்தால் மகன் அபிஷேக் சற்று பயத்தில் இருக்கிறான். எங்கு தேடியும் அப்பாவை காணவில்லை, பிறகு தன் அப்பா விபத்தில் இறந்த விஷயம் தெரியவர அபிஷேக் மனரீதியாக பாதிக்கப்படுகிறான். அப்போது அபிஷேக்கின் அப்பாவுக்கு பணம்கொடுத்த அருள் பாண்டியன், வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து வருகிறார். அருள் பாண்டியன் பணத்திற்கு பதில் அபிஷேக்கை அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறார். கடையில் ஹரன் வெளிநாடு சென்றாரா? இல்லையா? என்பதும், அபிஷேக் வாழக்கை என்னானது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பாலாஜி மாதவன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைகா- The Forest தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here