இறுகப்பற்று தமிழ் திரைப்பட விமர்சனம்

இறுகப்பற்று கதை

இந்த கதைக்களத்தில் 3 விதமான ஜோடிகள் இருக்கின்றனர், அவர்களுக்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இதில் மனோ & மித்ரா ஜோடி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட ஜோடி. மித்ரா திருமணமானவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். மித்ராவிடம் அர்ஜுன் & திவ்யா ஜோடி ஆலோசனை பெற வருகின்றனர். இவர்களுக்குள் காதலிக்கும்போது இருந்த அந்த புரிதல், திருமணத்திற்கு பின் இல்லை என்பதுதான் இவர்களின் பிரச்சனை.

Read Also: Shot Boot three Movie Review

மித்ராவிடம் ஆலோசனை பெற வரும் மற்றொரு ஜோடி ரங்கேஷ் & பவித்ரா. பவித்ராவின் உடல் எடை அதிகமாக இருப்பதால் ரங்கேஷ் – க்கு பிடிக்காமல் போகிறது. ஆதலால் விவாகரத்து ஆகும் அளவிற்கு இந்த பிரச்சனை வந்து நிற்கிறது. மனோவிற்கு, மித்ராவிடம் சின்ன சின்ன சண்டை போட ஆசை, அந்த ஆசையே ஒருகட்டத்திற்கு மேல் இவர்களுக்குள் பிரச்சனை வர காரணமாக இருக்கிறது. கடைசியில் இந்த மூன்று ஜோடிகளின் பிரச்சனை தீர்ந்து ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் யுவராஜ் தயாளன் இன்றைய சமூகத்தில் திருமணமானவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும், அதற்கான தீர்வையும் அழகாக கூறியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் பாடல்கள்

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைசாட் பூட் த்ரி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஎனக்கு எண்டே கிடையாது தமிழ் திரைப்பட விமர்சனம்