காதலிக்க நேரமில்லை கதை
கதையின் நாயகி ஸ்ரேயா திருமணம் நெருங்கும் சமயத்தில் தன் வருங்கால கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்துவிட்டு, திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து, திருமணத்தை நிறுத்திவிடுகிறார். ஆனால் ஸ்ரேயாவிற்கு குழந்தை என்றால் பிடிக்கும்.ஸ்ரேயாவிற்கு குழந்தை வேண்டும் என்பதால், IVF முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அதற்கான வேலைகளை செய்கிறார்.
Read Also: Nesippaya Tamil Movie Review
கதையின் நாயகன் சித்தார்த், நிருபமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் சமயத்தில் , சித்தார்த் குழந்தை வேண்டாம் என்கிறார் அதனால் திருமணம் நின்றுபோகிறது. இப்படி எதிர்மாறாக இருக்கும் இவர்கள் சந்திக்கிறார்கள் அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் க்ரித்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ரவிமோகன் & நித்யாமேனன் நடிப்பு
➡AR. ரஹ்மான் பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: ( 2 . 75 / 5 )