கண்ணகி தமிழ் திரைப்பட விமர்சனம்

கண்ணகி கதை

இந்த கண்ணகி திரைப்படம் நான்கு வித்யாசமான பெண்களின் வாழ்வில், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளே இந்த கண்ணகி திரைப்படம்.

கலைக்கு வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர், திருமணத்திற்காக மாப்பிள்ளையும் பார்க்கின்றனர். ஆனால் கலையின் அம்மா எதாவது ஒரு காரணம் சொல்லி மாப்பிளையை நிராகரித்து விடுகிறார். காரணம் கலைக்கு பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக. எதிர்பாராமல் கலையின் அப்பா இறந்து விடுகிறார், அதன்பிறகு கலை எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன என்பதே கலையின் மீதி கதை…

நேத்ராவின் கணவர், நேத்ராவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார், ஆனால் நேத்ராவிற்கு விவாகரத்து கொடுக்க பிடிக்கவில்லை, ஒருகட்டத்திற்கு மேல் நேத்ரா விவாகரத்து கொடுத்துவிடுகிறார். கணவன் இல்லாமல் நேத்ரா எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன என்பதே நேத்ராவின் மீதி கதை…

Read Also:Koose Munisamy Veerappan Documentary Series Review

நதி ஐடியில் வேலை செய்யக்கூடிய மாடர்ன் பெண்ணாக இருக்கிறார். இவர் ஒருநாள் Blind date ( கண்ணை கட்டிக்கொண்டு ) செல்வார், அங்கு ஒருவரை சந்திக்கிறார் அவரை பிடித்துவிடுகிறது. பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம், காதல் வேண்டாம், ஆனால் ஒன்றாக இருக்கலாம் என்று முடிவெடுத்து living together ல் வாழ்கின்றனர், அந்த பையன் நதியின் மேல் காதல்வயப்பட்டு தன் காதலை சொல்கிறார், ஆனால் நதி அதனை உதாசீனப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். அதன்பிறகு நதியின் வாழ்க்கை என்னாயிற்று என்பதே மீதி கதை…

கீதாவின் காதலன் சினிமாவில் இருக்கிறார். ஒருநாள் கீதா தன் காதலனுக்கு போன் செய்து தான் கர்பமாக இருப்பதாக சொல்கிறார், காதலன் கர்ப்பத்தை கலைத்துவிடலாம் என்கிறார். பிறகு இருவரும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர், கடைசியில் கீதா கர்ப்பத்தை கலைத்தாரா? இல்லையா? என்பதே மீதி கதை…

இந்த நான்குபேரின் வாழ்வும் எப்படி இணைகிறது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡முக்கிய நான்கு கதாநாயகிகளின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡வசனங்கள்
➡சிறப்பான இடைவேளை & கிளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் விமர்சனம்
அடுத்த கட்டுரைஃபைட் கிளப் தமிழ் திரைப்பட விமர்சனம்