பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்

நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம்,
நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன்
சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது.

காமடியுடன் படத்தை பிரமாண்டமாக காட்டியதுடன், ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார்கள்.
பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Fortune Films நவீன் ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் தயாரிக்கிறார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மிகப்பெரும் பொருட்செலவில், பிரமாண்டமான ‘செட்’கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் ” சைத்ரா “
அடுத்த கட்டுரைNetflix பண்டிகை: Netflix-ன் 2023 தமிழ் திரைப்பட அறிவிப்புகள்