கிங் ஆஃப் கொத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

கிங் ஆஃப் கொத்தா கதை

கிங் ஆஃப் கொத்தா என்கிற ஏரியா மிகவும் மோசமான இடமாகும் அந்த இடத்தில் அதிகமான அநியாயங்கள் நடக்கின்றன . அந்த இடத்தை ஆண்டுகொண்டிருக்கக்கூடியவர் கண்ணன் பாய் என்கிற ரவுடி. அப்போது அந்த இடத்திற்கு புதிதாக வந்திருக்கக்கூடிய போலீசான பிரசன்னா, வேறொரு போலீசிடம் கிங் ஆஃப் கொத்தா-வின் கதை என்ன, என்பதும் கண்ணன் பாய் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறார். என கேட்டு தெரிந்துகொள்கிறார்.

Read Also: Partner Movie Review

கிங் ஆஃப் கொத்தா- வை இதற்கு முன் ராஜு என்பர் ஆண்டுவந்ததும், ராஜு, மற்றும் கண்ணன் நண்பர்களாக இருந்ததும் சில காரணத்தால் ராஜு இந்த இடத்தைவிட்டு சென்றதையும் அறிந்த பிரசன்னா ஒரு திட்டம் போடுகிறார், ராஜூவை மீண்டும் கொத்தாவிற்கு வரவைத்தால் தான் கண்ணனை அடக்க முடியும் என்று சில திட்டங்களின் மூலம் ராஜூவை கொத்தாவிற்கு வரவைக்கிறார். அப்படி ராஜு வந்ததும் கண்ணனை வீழ்த்தி மீண்டும் கிங் ஆஃப் கொத்தா வாக மாறி, கொத்தாவை ஆண்டரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
துல்கர் & Dancing Rose ஷபீர் அசத்தலான நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

காலகாலமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய கேங்ஸ்டர்கதைக்களம்
கணிக்கும்படியாக இருக்கக்கூடிய அடுத்தடுத்த காட்சிகள்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here