கிங்ஸ்டன் கதை
1983-ல் தூத்துக்குடி அருகில் உள்ள துவத்தூர் என்கிற கிராமத்தில் இருக்கும் மீனவர்கள், அவர்கள் பகுதியில் இருக்கும் கடலுக்கு சென்று மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். அதனால் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு யாரும் சென்று மீன் பிடிக்கக்கூடாது என அரசாங்கமே உத்தரவிடுகிறது.
Read Also: Yamakaathaghi Tamil Movie Review
கதையின் நாயகன் கிங் இதையெல்லாம் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்கிறான். அவனுக்குள், நம் ஊர் கடலுக்குள் ஒரு நாள் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவன் பெரியவனானதும் தாமஸ் என்கிறவரிடம் வேலை செய்துகொண்டிருக்கிறான். தாமஸ் செய்வது தவறான வேலை என உணர்ந்த கிங், தான் தனது ஊரிலேயே மீன் பிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான், அதுமட்டுமல்லாமல் ஊர் மக்கள் சொன்னது அனைத்துமே பொய் என நிரூபிக்க நண்பர்களுடன் இணைத்து கடலுக்கு செல்கிறான் இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்த கிங்ஸ்டன் திரைப்படம் GV. பிரகாஷின் 25 வது திரைப்படமாகும்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡GV. பிரகாஷின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡சிறப்பான VFX காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡சுற்றிவளைக்கும் கதைக்களம்
ரேட்டிங்: ( 3 / 5 )