விக்டிம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

நான்கு விதமான ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட விக்டிம் – கதை

பா.ரஞ்சித் இயக்கத்தில் – தம்மம் கதை
குரு சோமசுந்திரத்திற்கும் , கலையரசனுக்கும் ஏற்படும் வாய்க்கால் வரப்பு சண்டையில் நடக்கும் அரசிலை அழுத்தமாக கூறும் கதை தான் இந்த தம்மம்

M.ராஜேஷ் இயக்கத்தில் -மிராஜ்
வெளியூரிலிருந்து வந்து வேலைக்காக ஒரு ஹோட்டலில் பிரியா பவனி தங்குகிறார் அங்கு வேலைசெய்து கொண்டிருக்கும் நட்டியால் சில பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சனையிலிருந்து பிரியா பவனி சங்கர் வெளியே வந்தாரா ? இல்லையா என்பதுதான் இந்த மிராஜ்

சிம்பு தேவன் இயக்கத்தில் – கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டைமாடி சித்தரும்
ஒரு மீடியாவில் வேலை செய்யும் தம்பி ராமையாவிடம் அவரின் மேலாளர் ஒரு சித்திரை பற்றி இண்டர்வியவ் எடுத்துக்கொண்டு வர சொல்கிறார், இதை பற்றி ஜூனியர் விக்னேஷிடம் ஆலோசனைக்கேட்க, அவரும் சித்தரை பற்றி நமது நிறுவன வெப்சைட்டில் இருக்கிறது அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூற , தம்பி ராமையாவும் விக்னேஷின் ஆலோசனையின் படியே செய்து சித்தரை அழைத்து வருகிறார் , சித்தரை வைத்து இன்டெர்வியூவும் எடுத்துக்கொள்கிறார், பிறகு தம்பி ராமையாவின் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை அதற்கான காரணத்தை தேடும்போது பல சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கிறது மற்றும் நான்கு டுவிஸ்டுகளை கொண்டதுதான் இந்த கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டைமாடி சித்தரும்

வெங்கட் பிரபு இயக்கத்தில் – Confession (வாக்குமூலம்)
கதையின் நாயகன் பிரசன்னாவிற்கு நாயகியான அமலா பாலிடமிருந்து ஒரு வாக்கு மூலம் வேண்டும் அதனால் அவரை துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறார், கடைசியில் பிசன்னாவிற்கு தேவையான வாக்குமூலம் கிடைத்ததா ? என்பதும் அமலா பாலிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் இந்த Confession (வாக்குமூலம்)

Read Also: Katteri Movie Review

நான்கு விதமான கதைகளும், நான்கு விதத்தில் நமக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கின்றன, நான்கு இயக்குனர்களின் தனித்துவமான டைரக்டர் டச் இருக்கிறது, மற்றும் நிறை குறைகள் பெரிதாக கூறும் அளவிற்கு இல்லை

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *