Koliagaran Movie Review

பெரும்பாலும் ஒரு சில நடிகர்களின் படங்களை பார்க்க நாம் ஆர்வம் காட்டுவோம் அதை போல் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் படங்களை பார்க்க ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆர்வமாக பார்க்க வருகிறார்கள். அப்படி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள கொலைகாரன் படம் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்
விஜய் ஆண்டனி கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு நபர் அவர் தனியே வாழ்ந்து வருகிறார். அப்போதுதான் அவருக்கு ஹீரோயின் ஆஷிமா அறிமுகமாகிறார். இன்னொரு பக்கம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆஷிமா தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். சந்தோசமாக செல்லும் இவர்களது வாழ்க்கை பின்னணியில் நடந்த பெரும் சோகம். இதற்கிடையில் விஜய் ஆண்டனிக்கும், ஆஷிமாவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு நாள் ஆஷிமாவை காண மர்ம நபர் அவரின் வீட்டின் நுழைகிறார். அம்மா, மகளின் உயிருக்கு ஆபத்தான வேளையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது. இந்நிலையில் போலிஸ் அதிகாரி அர்ஜூன் கொடூர கொலை சம்பவம் தொடர்பாக ஆஷிமா, விஜய் ஆண்டனியை விசாரிக்கிறார். இதில் கொலை செய்யப்பட்டது யார், ஆஷிமா ஆபத்திலிருந்து தப்பித்தாரா, ஆஷிமா, விஜய் ஆண்டனி இருவரும் காதிலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?, அர்ஜூன் தேடி வந்த கொலைகாரன் யார் என்பதே கதை.

படத்தை பற்றி அலசல்
பொதுவாக விஜய் ஆண்டனி விதவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் ஆகையால் இவருடைய படங்களை மக்கள் மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு வருகின்றனர். அதை போல் கொலைகாரனின் மிக அருமையாக நடித்துள்ளார். குறிப்பாக எந்த ஒரு சிரிப்பும் இல்லாமல், சீரியஸான நடிப்பை மிகவும் எதார்த்தமாகயும், த்ரில்லர் அனுபவத்தையும் நம்மிடம் கொண்டு சேர்கிறார். அதே வேளையில் ரொமான்ஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், அதிரடி என எல்லாத்திலும் கலக்கியுள்ளார்.

ஹீரோயின் ஆஷிமா நர்வால் தமிழ் சினிமாவுக்கு புதுமுகம். இவருக்கும் விஜய் ஆண்டனிக்கு இணையாக படத்தில் பயணிக்கிறார். முக்கியமாக தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளதால் கொஞ்சம் முன் அனுபவம் இருக்கிறது என அவரின் நடிப்பில் தெரிகிறது.ஹீரோனுக்கு அம்மாவாக சீதா அவரது கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துள்ளார் அதிலும் ஒரு சில காட்சிகளில் இவர் கையாளும் விதம் அருமை.

பல படங்களில் போலிஸ் அதிகாரியாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், இப்படத்திலும் ஒரு போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். இந்த படத்தில் யார் கொலையாளி என்று அர்ஜுன் வழக்கை அணுகும் விதம், அவருக்கே உண்டான தோரணை, ஸ்டைல் என போலீஸ் கதாபாத்திரத்தில் நம்மையும் விசாகரிக்க துண்ட வைக்கிறார். இதுமட்டுமில்லாமல் வழக்கு விசாரணையில் அவருக்கு ஆலோசனை வழங்கும் நாசரின் வசனும் நம்மை யோசிக்க வைக்கிறது.

இது ஒரு திரில்லர் படம் என்பதால் படத்தில் காமெடிகள் எதுவும் இல்லை. ஆனால் அதை எதிர்பார்க்காத அளவிற்கு படத்தை திரில்லர் போக்கிலேயே நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.
இசையமைப்பாளர் சைமன் கிங் இப்படத்தில் பின்னணி இசை, பாடல்கள் என விஜய் ஆண்டனியின் திரில்லர் படத்துக்கு ஏற்றார் போல் அமைத்து கொடுத்திருக்கிறார்.

படங்களில் பல திரில்லர் அனுபவங்களை கொடுப்பதால் ரொமான்ஸ் பாடல் ஒன்று இடையில் தேவை தானா என்ற உணர்வை நமக்குள் கொண்டு வருகிறது.

மொத்தத்தில் கொலைகாரன் எதிர்பாராத திகில் என்றாலும் கவனமாக பார்த்தால் தான் தெளிவாக புரியும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here