குடும்பஸ்தன் கதை
கதையின் நாயகன் நவீன், வெண்ணிலா என்கிற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்கிறார். இவர்களின் இந்த திருமணம் இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை, அதனால் இவர்களை யாரும் வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் இவர்களின் முன்பு நன்றாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என இருவரும் முடிவெடுக்கிறார்கள்.
Read Also: Bottle Radha Tamil Movie Review
நவீன் வேலைக்கு செல்கிறான், அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் ஒருநாள் அந்த வேலையும் போய்விடுகிறது. வேலை போனதை வீட்டில் மறைத்துவிட்டு வெளியில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார் நவீன், ஒருநாள் இந்த விஷயம் நவீனின் மாமா ராஜேந்திரனுக்கு தெரியவருகிறது, இவர் அதனை வெண்ணிலாவிடம் சொல்லிவிடுகிறார். அதன் பிறகு நவீன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡மணிகண்டன் & குரு சோமசுந்தரம் நடிப்பு
➡மற்ற அனைவரின் கதைக்கேற்ற நடிப்பு
➡எதார்த்த வசனங்கள்
➡வைசாக்- ன் பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡இடைவேளை & இறுதி காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡குறைசொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை
ரேட்டிங்: ( 3.25 / 5 )