என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி:  குமரன் தங்கராஜன் பெருமிதம்

ப்ரைமில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் ‘வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்கு குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக் களத்தை ‘வதந்தி’ தரும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். தமிழகத்தில் குமரன் தங்கராஜன் நன்கு பரிச்சியமான நடிகர்தான். அவரை ‘வதந்தி’ ட்ரெய்லரில் பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் இந்த கதாபாத்திரம் சீரிஸில் எப்படி பயணிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குமரனை இதற்கு முன்னர் டிவி ஷோக்கள், திரைப்படங்களில் ரசிகர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பாத்திருக்கின்றனர். ஆனால் ‘வதந்தி’ குமரனை முற்றிலும் வித்தியாசமாக முன்னிறுத்துகிறது. ட்ரெய்லரிலேயே குமரனுக்கு அமோக வரவேற்பு இருப்பதால் சீரிஸ் வெளியான பின்னர் அவரது திறமை இன்னும் அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 240 நாடுகளில் எல்லைகள் கடந்து பேசப்படும் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் குமரன், “தமிழக மக்களின் அன்பை நிறைவாகப் பெற்றுள்ளேன். இப்போது எனது திறமை கடல் கடந்து உலக நாடுகளுக்குச் செல்வதை நினைத்து அதீத மகிழ்ச்சியில் உள்ளேன். ‘வதந்தி’ பார்த்துவிட்டு மக்கள் சொல்லவிருக்கும் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்” என்று குறியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் வரவேற்புக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறும் குமரன், “எனது ரசிகர்கள் ட்ரெய்லரைக் கொண்டாடுகின்றனர். ரசிகர்களின் அன்பு நிறை குறுந்தகவல்களால் நனைந்து வருகிறேன். எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவுக்கும் அவர்கள் அன்பை காட்டி வருகின்றனர். உண்மையிலேயே இந்த வரவேற்பால் நான் திக்குமுக்காடிப் போயுள்ளேன்” என்றார்.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பேனரில் புஷ்கர் காயத்ரி ‘வதந்தி’ சீரிஸை தயாரித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். இந்த சீரிஸ் மூலம் சஞ்சனா நடிகையாக அறிமுகமாகிறார். இவர் வெலோனி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டிசம்பர் 2ஆம் தேதி முதல் ‘வதந்தி’ ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்…
அடுத்த கட்டுரைவதந்தி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்