கும்பாரி தமிழ் திரைப்பட விமர்சனம்

கும்பாரி கதை

கதையின் நாயகன் விஜய் விஷ்வா கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான இருக்கிறார். மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியா இவரின் நண்பர்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்

ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். பிறகுதான் தெரிகிறது, அது மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. இதை அறிந்து நாயகி மஹானாவை விஜய் விஷ்வா ஓங்கி அறைந்து விடுகிறார் . உன் சேனலை மக்கள் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா ?என்று திட்டுகிறார்.அந்த பிராங்க் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது.

Read Also: Route No .17 Tamil Movie Review

விஜய் விஷ்வாவின் துணிவும் அவரது குணமும் பிடித்துப் போய் மஹானா ,அந்த மோதலுக்குப் பின் காதலில் விழுகிறார். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் ஒரு சிக்கல் உண்டு. நாயகி மஹானாவுக்குத் திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன .அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள்.அதனால் வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜியா உதவுகிறார்.இவர்களை நாயகியின் அண்ணன் ஜான் விஜய் தேடிக்கொண்டிருக்கிறார், கடைசியில் இந்த எதிர்ப்புகளை மீறி நாயகனும் நாயகியும் இணைந்தார்களா? இல்லையா? என்பதும், இதற்கிடையில் இவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கெவின் ஜோசப் இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைநடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!