மறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் கதை

கதையின் நாயகன் கார்த்திக் சொந்தமாக நிறுவனம் வைத்துள்ளார், இவருக்கு தன் பள்ளி நினைவுகள் அடிக்கடி வருகிறது அதற்கு காரணம் கார்த்திக்கின் காதலி பிரியதர்ஷினி. தன் காதலியை பார்க்கவேண்டும் என்பதற்காக பள்ளியில் படித்த அனைவரும் ஒன்றாக சேருவதற்காக திட்டமிடுகிறார். ஆனால் நண்பர்கள் யாரும் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

கார்த்திக் படித்த பள்ளியில் 2008 ம் ஆண்டு +2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அந்த ஆண்டு படித்த அனைவரும் மீண்டும் மூன்றுமாதம் படித்து தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது, இதனால் அந்த ஆண்டு கார்த்திக் மற்றும் அவருடன் படித்தவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். கார்த்திக்கின் காதலியும் வருகிறார், கடைசியில் கார்த்திக் தனது காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதும் இவர்களின் தேர்வு என்னானது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ரக்கோ யோகேந்திரன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் உருவாக்கப்பட்ட விதம்
➡படத்தொகுப்பு
➡ஒருசில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
➡நம்மை கதையுடன் இணைக்காத கதைக்களம்
➡ஒருசில இடங்களில் ரக்ஷன் நடிப்பு

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது
அடுத்த கட்டுரைவடக்குப்பட்டி ராமசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்