திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகரம் பணிகளை மீண்டும் தொடரும் வகையில் மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு மற்றும் திரைப்பட அரங்குகள் அமைக்கலாம் என்ற அனுமதியையும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று இது குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களுடன் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்,
தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, கவுரவ செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேசன், பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி, துணைத் தலைவர் செந்தில், பொருளாளர் சுவாமிநாதன், சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்டோர்
ஆலோசனை நடத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.