முந்திரிக்காடு தமிழ் திரைப்பட விமர்சனம்

முந்திரிக்காடு கதை

கதையின் ஆரம்பத்தில் போலிஸ் அதிகாரி அன்பரசன் தன் மனதிலுள்ள சில விஷயங்களை பற்றி நோட்டில் எழுத ஆரம்பிக்கிறார் அப்படி அவர் முந்திரிக்காடு பற்றி எழுத தொடங்குகிறார்.

முந்திரிக்காட்டில் சிலர் மேல் ஜாதி கீழ் ஜாதி காதல் விவகாரத்தில் காதலர்களை கொன்று விடுகின்றனர். அதே சமயம் தெய்வம் என்ற பெண் செல்லா என்ற பையனுடன் பேசிக்கொண்டிருப்பதை சிலர் பார்த்து இருவரையும் கண்டிக்கின்றனர், பிறகு தெய்வத்திற்கு செல்லா உதவி செய்ய போய் மீண்டும் அதே பிரச்சனையில் சிக்கி கொள்கிறார் , அடுத்து தெய்வத்திற்கு செல்லா மீது காதல் ஏற்படுகிறது, ஆனால் செல்லா அதனை மறுக்கிறார் காரணம் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதுதான்.

ஆனால் தெய்வத்திற்கு கலப்பு திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார் அதற்காக செல்லாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார், கடைசியில் தெய்வம் நினைத்தபடி செல்லாவை திருமணம் செய்து ஆணவ கொலைகளுக்கு எதிராக போராடினாரா ? இல்லையா ? அல்லது இவர்களும் ஜாதி கடந்த காதலால் பலி ஆனார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

Read Also: August 16 1947 Movie Review

இந்த கதையினை இயக்குனர் மு. களஞ்சியம் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
வசனம்
சில எதார்த்த காமெடிகள்

படத்தில் கடுப்பானவை
மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான சண்டை காட்சிகள்
படத்தின் வேகத்தை குறைக்கும் பாடல்கள்

Rating : ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைரேசர் தமிழ் திரைப்பட விமர்சனம்