ஆகஸ்ட் 16 1947 தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 கதை

1947 ஆகஸ்ட் 12: புளியங்குடி என்ற ஊருக்கு அருகில் செங்காடு என்ற சிறிய கிராமம் பெரிய மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வெளியே போகவேண்டுமென்றால் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும் , பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரத்தில் ஒரு திட்டம் தீட்டுகின்றனர், செங்காடு கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வெண்மையான பருத்தி பஞ்சு உற்பத்தி நடக்கின்றது அதில் அதிகளவு வருமானமும் வருகிறது , இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அதில் வரும் வருமானம் தங்களுக்கு வருகிற மாதிரியான ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர்.

செங்காடு கிராமத்தை ராபர்ட் என்ற அரக்கன் ஆண்டுவருகிறான் அங்கு உள்ள மக்கள் அனைவரையும் மிகவும் கொடுமை படுத்துகிறான் மற்றும் அவர்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்குகிறான். ராபர்டின் மகன் ஜஸ்டின் அங்கு உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறான், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் நமக்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்று அந்த ஊர் மக்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.

1947 ஆகஸ்ட் 14 : அன்று ராபர்ட் ஒரு திட்டம் தீட்டுகிறார் இங்கு உள்ள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது தெரியக்கூடாது. தான் இந்த செங்காடு கிராமத்தை எப்பொழுதும் ஆள வேண்டும் என்று நினைக்கிறான் , கடைசியில் ராபர்ட் நினைத்தபடி இந்த கிராமத்தை காலம் முழுதும் ஆள்கிறாரா ? இல்லை தங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததை மக்கள் அறிந்துகொண்டு அவர்களை எதிர்த்து தங்கள் சுதந்திரத்தை பெற்றார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் NS. பொன்குமார் மிகவும் தத்ரூபமாக , ஒரு நல்ல படைப்பினை படைத்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
அறிமுக நடிகை ரேவதியின் நடிப்பு
கதைக்களம் & திரைக்கதை
ஒளிப்பதிவு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை

Rating : ( 3.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *