“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது…
என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன். தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதை சொன்ன போது அவர் பிரபுதேவா மாஸ்டர் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். நானும் அவரை மனதில் வைத்தே நானும் எழுதியிருந்தேன். அதனால் பிரபுதேவா மாஸ்டரிடம் கேட்டோம் அவருக்கு கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது.

இந்தப்படத்திற்காக பிரபுதேவா மாஸ்டர் மொட்டை போட வேண்டியிருந்தது. அவர் நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், யோசித்தார் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார். 45 நாட்கள் எங்குமே அவர் தலை காட்டவில்லை. இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு உழைத்தார். அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார். பிரபுதேவா சார் இந்தப்பையன் நம்மை தூக்கி சாபுடறான்ம்பா என்று புகழ்ந்தார். இந்தப்படத்தில் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியொருடன் என்னோட பொண்ணு கேசிதாவும் ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். பிக்பாஸ் சம்யுகதா ஒரு பாத்திரம் செய்துள்ளார்.

இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்து,குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.

Also Read: Iravin Nizhal Movie Review

நடிகர்கள் & தொழில் நுட்ப குழு குழு:
நடிகர்கள்: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், அஷ்வந்த்
தயாரிப்பாளர்: ரமேஷ் P பிள்ளை
எழுத்து இயக்கம் : N ராகவன்
இசை: D.இமான்
ஒளிப்பதிவு: U.K.செந்தில் குமார்
எடிட்டர்: ஷான் லோகேஷ்
உரையாடல்: தேவா
கலை: A.R.மோகன்
பாடல் வரிகள்: யுகபாரதி
நடனம்: ஸ்ரீதர்
சண்டைக்காட்சி: G.N.முருகன்
ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: ஷங்கர் சத்தியமூர்த்தி, M.கிட்டு
ஒலி வடிவமைப்பு: டி.உதயகுமார்
VFX: A.M.T.Media Tech
மோஷன் போஸ்டர் : 369 VFX ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் பிலிம்ஸ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here