நாயாடி கதை
நாயாடி என்றால் 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவகை சாதியினரை குறிக்கும் , அடிமையாய் வாழ்ந்த இவர்கள் , சில தெய்வங்களின் ஆசியுடன் வரன்பெற்று சில சக்திகளை அடைகின்றனர், அந்த சக்தியை வைத்து உடல் விட்டுஉடல் மாறி பல ஆண்டுகள் உயிர்வாழலாம், இந்த செயலை செய்யக்கூடியவர்களே நாயாடி.
Read Also: Asvins Movie Review
யூடியூபில் வீடியோ போடும் கதையின் நாயகன் ஆதர்ஷ் மற்றும் அவர்களின் நண்பர்களிடம் ஒருவர் வந்து ஒரு உதவியை கேட்கிறார், அது என்னவென்றால் அந்த பெரியவருக்கு மலைப்பகுதியில் ஒரு எஸ்டேட் இருப்பதாகவும் அதன் அருகில் ஏதோ அமானுஷிய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார், அதனால் நீங்கள் வந்து அந்த இடத்தில் எதுவும் இல்லை என்பதை வீடியோவாக எடுத்துத்தர சொல்கிறார்.
இவர்கள் அனைவரும் அந்த எஸ்டேட் சென்ற பிறகு மர்மமான ஒரு உருவம் தெரிகிறது மற்றும் மர்மமான சில விஷயங்களும் நடக்கிறது. அந்த உருவத்தை பார்த்து பயந்துபோன இவர்கள் மலையிலிருந்து கீழே இறங்க முயற்சிக்கிறார்கள், அப்படி முயற்சிக்கும்போது இவர்கள் சுற்றி சுற்றி அதே இடத்திற்கு வருகின்றனர், கடைசியில் இவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதும் நாயாடி என்பதற்கான அர்த்தமும் தான் படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆதர்ஷ் , இயக்கி நடித்துள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்கரு
அனைவரின் நடிப்பு
விறுவிறுப்பான இரண்டாம்பாதி கதைக்களம்
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
படத்தை உருவாக்கிய விதம்
Rating : ( 2.5/5 )