நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கதை
படத்தின் ஆரம்பமே காதல் தோல்வி பாடலில் தொடங்குகிறது, கதையின் நாயகன் பிரபு 3 ஹோட்டலில் Chef ஆக வேலைசெய்கிறார். பிரபுவுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக, குடும்பத்துடன் சேர்ந்து பெண் பார்க்க செல்கிறார்கள் அங்கு சென்று பார்த்தால், பிரபுவின் பள்ளி தோழியான ப்ரீத்தி இருக்கிறார். இருப்பினும் கொஞ்சநாள் பேசி பார்ப்போம் என முடிவெடுத்து இருவரும் பேச தொடங்குகிறார்கள்.
Read Also: Otha Votu Muthaiya Tamil Movie Review
பிரபுவுக்கும், ப்ரீத்திக்கும் செட் ஆகின்ற நேரம் பார்த்து. பிரபுவின் பழைய காதலியான நிலவிடமிருந்து பத்திரிகை வந்திருக்கும், அப்போது பிரபு ஒரு குழப்பத்திற்குள்ளாக ப்ரீத்தி, பிரபுவை நிலாவின் திருமணத்திற்கு சென்றுவர சொல்கிறார். பிரபுவும், நண்பன் ராஜேஷும் சேர்ந்து நிலாவின் திருமணத்திற்கு செல்கிறார்கள், அதன் பிறகு என்ன ஆயிற்று பிரபு நிலாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? இல்லை ப்ரீதியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் தனுஷ் அவர்கள் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அறிமுக நாயகன் பவிஷ் & மேத்யூ நடிப்பு
➡மற்ற அனைவரின் சிறப்பான நடிப்பு
➡சிரிக்கவைக்கும் ஒருசில காட்சிகள்
➡ஒளிப்பதிவு
➡GV- யின் பாடல்கள் & பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: ( 3 / 5)