நிறங்கள் மூன்று கதை
இந்த கதையினை மூன்று நிறங்களாக பிரித்துள்ளனர்.
நிறம் 1
பள்ளி மாணவன் ஸ்ரீ அதிகாலையில் டியூஷன் முடித்துவிட்டு வரும்போது ஒரு பெண்ணை, ஒரு கும்பல் கடத்துகிறார்கள் அதனை ஸ்ரீ பார்த்துவிடுகிறான். பள்ளிக்கு வந்து பார்த்தால் அந்த கடத்தப்பட்ட பெண், தனது ஆசிரியரின் மகள் என்பது தெரியவருகிறது, பிறகு ஸ்ரீ அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறார்…
நிறம் 2
வெற்றி சினிமாவில் இயக்குனராக வேண்டும் என முயற்சிக்கிறார். பல இடங்களில் கதை சொல்கிறார், அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இவனது கதையை கேட்ட ஒரு இயக்குனர், அந்த கதையினை ஒரு நாயகனிடம் சொல்லி படப்பிடிப்புக்கு தயாராகிறார். இதனை அறிந்த வெற்றி என்ன செய்கிறார்…
நிறம் 3
செல்வம் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறார், இவர் மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி. இவருக்குத்தான் அந்த காணாமல் போன பெண்ணின் கேஸ் போகிறது. இவர் அந்த பெண்ணை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் இந்த மூன்று நிறங்களும் எப்படி ஒன்று சேர்க்கிறது, அனைத்து பிரச்னைகளும் முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
Read Also: Parari Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் நரேன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அதர்வா & ரஹ்மான் நடிப்பு
➡நடிகர்கள் தேர்வு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
ரேட்டிங்: (2 .75 / 5)