பராரி கதை
திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் இருக்கின்றனர், இவர்களுக்குள் யார் பெரியவன் என்ற சண்டை அடிக்கடி நடக்கிறது. கதையின்நாயகன் மாறா தானாக எந்த பிரச்னைக்கும் போகமாட்டார், ஆனால் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் நிற்பார். நாயகன் மாறாவை, தேவகி என்ற பெண் சிறுவயதிலிருந்து காதலிக்கிறார்.
மாறா நேர்மையாக இருப்பதால், சிலரால் அரசியல் செய்யமுடியவில்லை ஆதலால், மாறாவை கொலை செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். மாறா, தேவகி மற்றும் கொலை செய்ய நினைபவர்கள் அனைவரும் பெங்களூருக்கு வேலைக்கு செல்கிறார்கள். அங்கு இவர்களுக்கு மொழி பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் மொழி பிரச்சனை என்னானது, மற்றும் தேவகியை மணந்தாரா? மாறாவை கொலை செய்ய வந்தவர்கள் கொலை செய்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்க, இயக்குனர் ராஜு முருகன் வெளியிடுகிறார்.
படத்தில் சிறப்பானவை
➡கதையின் நாயகன் & நாயகி நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡அரசியல் பேசும் வசனங்கள்
➡பின்னணி இசை & பாடல்கள்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡சுற்றிவளைக்கும் திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .75 / 5 )