பட்டத்து அரசன் கதை
40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா ). குடும்பத்தில் நடந்த சில விஷயங்களால் அதர்வா சிறுவயதிலிருந்தே பொத்தாரி குடும்பத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டு இருப்பார், எப்படியாவது தாத்தாவுடன் சேர்ந்து ஆக வேண்டும் என்பதற்க்காக போராடுவார். ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்காது, பொத்தாரியின் மற்றொரு பேரனான செல்லையா, (ராஜ் ஐய்யப்பா ) ஒரு சூழ்ச்சியால் இறந்துவிடுகிறார், அதனால் பொத்தாரி குடும்பத்துக்கும் ஊர் மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது, அப்படி ஏற்படும் பிரச்சனையில் அதர்வா ஒரு சவால் விடுகிறார்… அது என்னவென்றால், வருகிற திருவிழாவில் நடக்கும் கபடி போட்டியில் ஊர் ஒரு பக்கமும், பொத்தாரியின் குடும்பம் ஒரு பக்கமும், விளையாட வேண்டும் என்பதுதான். அப்படி இந்த விளையாட்டில் ஊர் மக்கள் வென்றால், பொத்தாரியின் குடும்பம் ஊர் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும், ஒருவேளை பொத்தாரி குடும்பம் வென்றால் இவர்கள் மேல் எந்த தவறும் இல்லை என அந்த கடவுளே சொன்ன மாதிரி என அதர்வா சவால் விடுகிறார். அதர்வா தனது குடும்பத்துடன் சேர்ந்து இவர் விட்ட சவாலில் வென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை… மற்றும் இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இயக்குனர் சற்குணம் அவருக்கே உண்டான பாணியில், மண் வாசனை வீசும் படமாகவும், கூட்டுகுடும்பத்தை பற்றியும் கூறியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்
சுவாரஸ்யமற்ற திரைக்கதை
Rating: ( 3.25/5 )


























