பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு,ar rahman speech, latest trisha news, maniratnam latest speech, maniratnam speech ponniyin selvan, maniratnam speech ponniyin selvan teaser launch, morning news, ponniyin selvan movie teaser launch, Ponniyin Selvan Press Meet, Ponniyin Selvan Teaser, ponniyin selvan teaser launch, ponniyin selvan teaser launch full event, ponniyin selvan: i, tamil latest news, tamil serial promos, trisha latest speech, trisha latest update, trisha ponniyin selvan, trisha speech latest,Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்கள் பேசியதாவது:

இயக்குநர் மணி ரத்னம் பேசும்போது,

எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன். சண்டைக்கு செல்லும்போது ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள் தான் இருக்கும். அதன்படி தான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

இப்படத்திற்கு வசனங்கள் முதலில் தூய தமிழில் தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேசமுடியவில்லை, உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில் தான் எழுதிக் கொடுத்தார்.

பொன்னியின் செல்வனை நானும் படித்திருக்கிறேன். அதிலிருந்து என்னுடைய விளக்கத்தை கூறி காட்சிப்படுத்தி இருக்கிறேன். படம் எடுக்கும் வரை இத்தனை நாட்களாக எல்லோரும் புத்தகத்தைப் படித்துவிட்டு எங்கு இருந்தார்களோ நானும் அங்கேதான் இருந்தேன்.

தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ என்ற பாடலை இப்படத்திற்கு ஒரு டிரைலராக வைத்துக் கொள்ளலாம். பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியின் வேடத்தை தான் அந்த பாடலில் பயன்படுத்தி இருப்பேன். அதை தவிர என்னுடைய முந்தைய படங்களில் வேறு எதையும் நான் எடுக்கவில்லை.

மாற்றங்கள் என ஏதும் இல்லை, முழு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது. ஒரே படத்தில் கதை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் 2 பாகங்கள் எடுக்கலாம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது.
பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க அது வசதியாக அமைந்தது. இத்தனை வருடங்கள் எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது.

இப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது ஒவ்வொருவரையும் இந்த பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்து தான் முடிவு செய்தேன். அது சரியாகவும் வந்திருக்கிறது.

மேலும், பல காட்சிகளை புத்தகத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த முடியாது. அதை புரிய வைக்கவும் முடியாது. ஆகையால், சினிமாவிற்கு ஏற்றபடி காட்சிகளை சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அமைத்திருக்கிறேன்.

மணிரத்தினம் இப்படித்தான் படம் எடுப்பார் என்று என்னை பற்றி கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

டிரைலர் பார்த்ததும் முழு படத்தையும் கணிக்க கூடாது. முழு படத்தையும் பார்த்து விட்டு தான் நிறை குறைகளை கூற வேண்டும். அதை மீறி வரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன்.

திரிஷா நன்றாக தமிழ் பேசினார். அன்று நந்தினி பாத்திரத்திற்கு இந்தி ரேகா தான் சரியான தேர்வாக இருந்தார். இப்போது ஐஸ்வர்யா ராய் தான் சிறந்தவராக தோன்றினார்.

ஜெயமோகன் தமிழ் எளிமையாக இருக்கும்.. எளிதாக நடிக்க முடியும். சிறந்த contribution அவர். எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால் சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்து தான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்தார்.

நடிகர் கார்த்தி பேசும்போது,

மேற்கத்திய படங்களில் விலங்குகளை நிறைய பார்க்கிறோம். ஆனால், தமிழில் மிக குறைவாகவே வருகிறது. ஆகையால், முக்கியமாக குதிரையையும் யானையையும் பார்ப்பதற்காகவே இப்படத்திற்கு வருவார்கள் என்று நானும் ஜெயம் ரவியும் பேசிக்கொண்டிருந்தோம்.

ஒரு குதிரையுடன் நாம் பழகினால் தான் அது நாம் சொல்லுவதை கேட்கும். எனக்கு ஏற்கனவே குதிரை பயணம் தெரியும். ஆனால், கொரோனா காலகட்டத்தில் ஒரே குதிரையை, எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்லமுடியவில்லை. நான் கிட்ட தட்ட 6 முதல் 7 குதிரைகளுடன் பழகினேன்.

படப்பிடிப்பில் குதிரையில் இருந்து கீழே விழுந்து விட்டேன். ஆனால், மணி சார் எனக்கு தேவையான இடத்தில் அதையும் உபயோகிக்கப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

ட்விட்டரில் வரும் கலந்துரையாடல் விளையாட்டாக ஆரம்பித்தது. ஆனால், அது இந்தளவு வைரல் ஆகும் என்று நினைக்க வில்லை.

நம் வரலாற்றை பேசப்படும் படம் இது. அந்த காலத்தில் ராஜ ராஜ சோழன் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியுமா? என்று மணி சாரிடம் கேட்டேன். அப்போது புகைப்படம் இல்லை ஆகையால் அவரை பலருக்கு தெரியாது என்றார். ஜெயராம் சார் மாதிரி உரிமையாக யாரும் பழக முடியாது.

இப்படத்திற்காக உபயோகப்படுத்திய, நாங்கள் அணிந்துகொண்ட நகைகள் அனைத்தும் உண்மையானவை. அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. நகைகளின் எடை காது வலிக்கும்.

மணி சார் அந்த காலகட்டத்தை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்.

வந்திய தேவன் எதையும் யோசிக்காமல் உள்ளே செல்வான். பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். ஆனாலும், சுலபமாக வெளியே வந்து விடுவான். இது தான் இப்படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது,

சினிமாவில் ஒரு இயக்குநரின் பின் தான் போக வேண்டும். ஆகையால், நானும் மணி சார் கூறியது போல் தான் செய்தேன். அதேபோல் எனக்கான காட்சிகளை கூறி விட்டு இதை நீங்கள் உங்களுக்கு தோன்றிய படி செய்யுங்கள். எனக்கு தேவையானதை நான் எடுத்து கொள்கிறேன் என்று சுதந்திரமும் கொடுத்தார்.

அப்பா நடிக்கும் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதிலும் மணி சார் படத்தில் முதல் நாள் படப்பிடிப்பிலேயே நடந்ததில் மகிழ்ச்சி என்றார்.

நடிகர் ரகுமான் பேசும்போது,

புத்தகத்தில் வரும் கட்சிகளை இப்படி தான் அந்த காலத்தில் பேசி இருப்பார்கள் என்று யூகிக்க தான் முடியும். ஆனால், அன்றும் இன்றும் நிஜம் தான் நடந்திருக்கிறது. ஆனால், மணி சார் இந்த காலகட்டத்தில் பேசினால் எப்படி இருக்குமோ அதற்கு ஏற்றபடிதான் வசனங்களைக் கொடுத்தார்.

எனக்கு கொடுத்த பாத்திரம் அருமையான கதாபாத்திரம். எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் பாத்திரம். இதற்கு மேல் வேறு எதையும் கேட்க முடியாது என்றார்.

நடிகை திரிஷா பேசும்போது,

6 மாதங்களாக வீட்டு பாடம் செய்து பல பார்வைகளை சோதித்து பார்த்தோம். இறுதியில் குந்தவைக்கு இதுதான் சரியாக இருக்கும் என்று வடிகட்டி கொண்டே வந்தோம்.

வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன். வசனங்களை சரியாக உச்சரிப்பதற்கு மணி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். முதல் நாள் படப்பிடிப்பிலேயே நானும் ஐசும் சேர்ந்த காட்சிகளை எடுத்தார்கள். அப்போதே நாங்கள் நன்றாக பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால், மணி சார் நீங்கள் இருவரும் இந்த அளவிற்கு நட்பாக இருக்க கூடாது. காட்சிகள் சரியாக வராது என்று கூறினார்.

முழு உடைகள் இருக்கும், நகைகள் நிறைய இருக்கும், நடிக்கும் போது பெரிதாக இருக்காது. ஆனால், ஓய்வு எடுக்கும் போது பெரும் சவாலாக இருந்தது. அதிக எடையால் காது வலிக்கும். தண்ணீர் குடிக்க முடியாது.

இப்படத்தில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக ஒப்பனை செய்ய அதிக நேரம் ஆனது. காலை 7 மணி படபிடிப்பிற்காக அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கே ஒப்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம் என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,

எனக்கு சுருட்டை முடி. இப்படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும். இதற்கு மேல் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது என்று, அதை ஸ்லோவ் மோஷனில் நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்.

இதன் பிறகு சிறப்பாக என்ன செய்ய போகிறாய்? என்று அண்ணன் கூட கேட்டான். நீ தனி ஒருவன் 2 இயக்கு என்று கூறினேன்.

ஆனாலும், எனக்கும் அது தான் தோன்றியது. இதைப் பற்றி மணி சாரிடமும் கேட்டேன். அதற்கு அவர், இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் என்று கூறினார். இதை விட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்தில் கற்று கொண்ட அனுபவங்களைக் கொண்டு இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here