ரயில் கதை
கதையின் நாயகன் முத்தையா ஒரு எலக்ட்ரீசியன், இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் இவர் குடிக்கு அடிமையாகி, வேலைக்கு போகாமல் மனைவியின் நகையை வைத்து நண்பனுடன் சேர்ந்து குடித்துக்கொண்டு சுற்றுகிறார். இவரின் ஊரில் வடமாநிலத்தவர் அதிகம் இருக்கின்றனர், இவருக்கு வர வேண்டிய வேலையெல்லாம் அவர்களுக்கு செல்கிறது. இதனாலேயே வடமாநிலத்தவர்களை கண்டால் இவருக்கு பிடிக்காது.
முத்தையாவின் வீட்டருகில், சுனில் என்ற வடமாநிலத்தவர் இருக்கிறார். ஒருநாள் முத்தையாவுக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. அந்த சண்டையை தடுக்கும்போது சுனில், முத்தையாவை அடித்துவிடுகிறார். இதனால் முத்தையா, சுனிலை கொல்ல வேண்டும் என துடிக்கிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡வசனம்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: (3 / 5)