ரெட் சாண்டல் வுட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெட் சாண்டல் வுட் கதை

திருப்பதி சேஷாச்சலம் காடு 190 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த காடு முழுவதும் மிகவும் விலையுயர்ந்த மரமான செஞ்சந்தன மரம் இருக்கிறது. இந்த மரங்களை வெட்டி விற்று வியாபாரம் செய்பவன்தான் KGF ராம், இதற்கிடையியல் யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிடுவார். இவையனைத்தையும் சமூக போராளி என்ற போர்வையில் ( பார்வையில் ) செயல்படுத்துகிறார்.

Read Also: Jawan Movie Review

தனது நண்பனின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால், நண்பனை அழைத்துவர திருப்பதி செல்கிறார் கதையின் நாயகன் வெற்றி, அப்படி சென்ற இடத்தில் வேறொரு நண்பனை பார்க்க, அப்போது போலீஸ் வந்து இவர்களை சோதனை செய்ய வெற்றியின் நண்பர் செஞ்சந்தன கட்டைகளை வைத்திருந்ததால், அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த பிரச்னையிலிருந்து வெற்றி தப்பித்து தன் நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த கதையினை அறிமுக இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சாம் CS பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

விறுவிறுப்பற்ற திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைMiss ஷெட்டி Mr பொலிஷெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஅங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்