ரிப்பப்பரி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரிப்பப்பரி கதை

கதையின் ஆரம்பத்தில் ஒரு நாய் பொம்மைக்குள் இருந்து வரும் பேய் ஒரு காதல் ஜோடியின் காதலனை கொன்றுவிடுகிறது. கதையின் நாயகன் ராஜ் மற்றும் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து யூடியூபில் சமையல் சேனல் வைத்திருக்கின்றனர், அதில் கமெண்ட் மூலமாக Gold Fish என்ற பெண்ணை கதையின் நாயகன் ராஜ் காதலிக்கிறார்…

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராஜின் உதவியை நாடி அவரின் நண்பன் ஒருவர் வருகிறார் கூடவே அவரின் காதலியையும் கூட்டி வருகிறார், எதிர்பாராத விதமாக அந்த நண்பர் பேயால் கொல்லப்பட்டு இறந்துவிடுகிறார், பிறகு போலீஸ் இந்த மூன்று நண்பர்களுக்கும் அந்த பேயை பற்றி கூறிவிட்டு , அந்த பேய் தலைக்கரை ஊரில் சாதி காதலால் இறந்த பேய் என்று இந்த மூன்று நண்பர்களையும் அந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர் கூடவே அந்த பேயை கண்டறியும் ஒரு பொம்மையையும் கொடுத்து அனுப்புகிறார் , ஆனால் நாயகன் ராஜ் அவரின் காதலி Gold Fish அதே ஊர் என்பதை தெரிந்து கொண்டு அவரை தேட ஆரம்பிக்கிறார்.

கடைசியில் இந்த மூன்று பேர் அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்து அந்த கொலைகளுக்கான காரணத்தையும் கண்டுபிடித்தார்களா ? இல்லையா என்பதும் நாயகன் ராஜ் அவரின் காதலி Gold Fish ஐ கண்டுபிடித்து தனது காதலை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையை இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்கரு
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
பாடல்கள்
சுற்றிவளைக்கும் திரைக்கதை
கணிக்கும்படியான அடுத்தடுத்த காட்சிகள்

Rating : ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் First Look போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!
அடுத்த கட்டுரைசொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்